ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை
#Afghanistan
Prasu
4 years ago
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை தலிபான்கள் அமைக்காவிட்டால் ஆப்கானிஸ்தானில் விரைவில் உள்நாட்டு போர் ஏற்படலாம். அது பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்படும் பட்சத்தில் மனிதாபிமான மற்றும் அகதிகள் பிரச்சினைகளே முதற்கட்ட கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும். ஆயுத கும்பல்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தலாம். அவ்வாறு நடந்தால் அது நிலைத்தன்மையற்ற மற்றும் குழப்பமான ஆப்கானிஸ்தானாக அமையும்’ என்றார்.