நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக குப்பைத் தொட்டியில் இரு கைக்குண்டுகள் மீட்பு

#Negombo #Police
Prathees
3 years ago
நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக குப்பைத் தொட்டியில் இரு கைக்குண்டுகள் மீட்பு

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில்  குப்பைத் தொட்டியில் இருந்ர்து இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் குப்பை சேகரிக்க வந்த மாநகர சபை ஊழியர் இரு கைக்குண்டுகளை கண்டுள்ளார். இதனையடுத்து  சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைக்குண்டுகள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இரண்டு கைக்குண்டுகள் எவ்வாறு குப்பைத் தொட்டியில்  காணப்பட்டமை  குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!