மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து வீடுகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை சுரண்டி எடுத்தது அரசு! - சாடுகின்றார் கபீர் ஹாசீம்

#government
Reha
3 years ago
மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து வீடுகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை சுரண்டி எடுத்தது அரசு! - சாடுகின்றார் கபீர் ஹாசீம்

பால்மா, உணவுப் பொருட்களுக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை, மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து அரசு சுரண்டி எடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், "அரசுக்கு வருமானம் இல்லாத காரணத்தால் கலால் வரியைப் பெற்றுக்கொள்வதற்காகவே மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனூடாக வீடுகளில் உள்ள தாய்மார் பல்மா, உணவுப் பொருட்களை வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை அரசு தமது வருமானத்துக்காகச் சுரண்டி எடுத்துள்ளது.

பால்மா, அரிசிக்குத் தட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் பால்மா விலையை அதிகரித்தனர்.  மதுபானசாலைகள் திறக்கப்பட்டதால் ஆண்கள் வீடுகளில் உள்ள தாய்மார் சேமித்து வைத்திருந்த பணத்தை பறித்தெடுத்து வந்து அரசுக்குக் கொடுத்துள்ளனர்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!