இயலுமானவரை விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவும் - பேராசிரியர் நீலிகா மளவிகே

#Covid Vaccine #Corona Virus
Reha
3 years ago
இயலுமானவரை விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவும் - பேராசிரியர் நீலிகா மளவிகே

நாட்டின் சனத்தொகையில் குறித்தளவானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும் அதுகுறித்து அச்சமடையத்தேவையில்லை. ஆகையினால் தற்போது 20 - 30 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில், அவ்வயதுப்பிரிவினர் இயலுமானவரை விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயெதிர்ப்புப்பிரிவின் பேராசிரியர் நீலிகா மளவிகே வலியுறுத்தியுள்ளார்.

'நிச்சயமாக வசந்தம் உதயமாகும்' என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் டெல்டா வைரஸ் அடையாளங்காணப்பட்டதன் பின்னர் அண்மைக்காலத்தில் புதிய திரிபுகள் எவையும் இனங்காணப்படவில்லை. அதேவேளை புதிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும், அவற்றை தடுப்பூசி வழங்கலின் ஊடாகவே கட்டுப்படுத்தமுடியும். 1918 - 1919 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'இன்புளுவென்சா' என்ற வைரஸ் பரவலினால் ஒட்டுமொத்த உலகமும் பாரிய சுகாதாரநெருக்கடிக்கு முகங்கொடுத்தது.

அதன் விளைவாக உலக சனத்தொகையில் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள். இருப்பினும் அதற்கெதிரான நோயெதிர்ப்புசக்தி விருத்தியடைந்ததன் பின்னர், தற்போதும் இன்புளுவென்சா வைரஸின் வெவ்வேறு திரிபுகள் காணப்படுகின்றபோதிலும் அதனாலேற்படும் பாதிப்புக்கள் முன்னரைப்போன்று மிகமோசமானதாக இல்லை.

இன்புளுவென்சா வைரஸின் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் தரப்பினருக்கு, குறிப்பாக மேற்குலகநாடுகளில் இப்போதும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. எனவே அதனைப்போன்று நாட்டின் சனத்தொகையில் குறித்தளவானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும் அதுகுறித்து அச்சமடையத்தேவையில்லை.

ஆகவே குறித்தளவான சனத்தொகையினருக்கு முழுமையாகத் தடுப்பூசியை வழங்குவதன் மூலமே இந்தத் தொற்றுப்பரவல் நெருக்கடியிலிருந்து மீளமுடியும்.

வயது முதிர்ந்தவர்கள், ஏனைய தொற்றாநோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு தொற்றினால் ஏற்பாடும் தாக்கம் உயர்வு என்பதால், தடுப்பூசி வழங்கலில் அவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.

இருப்பினும் அதனால் இளையோருக்கு தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று கருதக்கூடாது.

ஆகையினால் தற்போது 20 - 30 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில், அவ்வயதுப்பிரிவினர் இயலுமானவரை விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!