மஸ்தான் எம்.பியின் இணைப்பாளர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு

#Covid 19 #Death
Yuga
3 years ago
மஸ்தான் எம்.பியின் இணைப்பாளர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சலாஹீதீன் ஹாஜி (சாபு) என்பவரே மரணமடைந்தவராவார்.

இவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவர், பட்டக்காடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜீம்ஆ பள்ளி வாசல் தலைவரும், பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக் கல்லூரியின் உபதலைவரும், வவுனியா பள்ளிவாசல் குழுவின் பொருளாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளரும் ஆவார்.

குறித்த நபரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!