இன்று கூடுகிறது பாராளுமன்றம்
#Parliament
#SriLanka
Prathees
4 years ago
கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் பலவற்றை முன்வைப்பதற்காக பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தற்போதுள்ள கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கூடும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
அதனடிப்படையில் பாராளுமன்றில் பல திருத்தச் சட்டங்கள் இன்று (21) முன்வைக்கப்படவுள்ளது.
அதேநேரம், நுகர்வோர் அதிகார சபை திருத்தச் சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளைய தினம்பாராளுமன்றில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.