குடிபோதையால் ஏற்பட்ட கலவரம்: 52 பேர் மருத்துவமனையில்!
#Colombo
#Hospital
Prathees
3 years ago

குடிபோதையில் ஏற்பட்ட கலவரத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக வந்திருப்பதாக மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களில் ஐந்து பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் 17 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மருத்துவமனைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலம் மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகே அனைவரும் சிகிச்சை பெற வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்கு சுகாதார பரிசோதகர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



