100ஐ விட குறைந்துவரும் இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்

#SriLanka #Death #Corona Virus #Covid 19 #Covid Vaccine
Nila
3 years ago
100ஐ விட குறைந்துவரும் இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்

இலங்கையில் இன்று ,509 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் 1,055 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய இதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து 4 இலட்சத்து 33 ஆயிரத்து 93 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலஇலங்கையில் மேலும் 93 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் சாவடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று இந்தச் சாவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 93 பேரில் 45 ஆண்களும், 48 பெண்களும் உள்ளடங்கின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஆண் ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர். 12 ஆண்கள், 12 பெண்கள் என 24 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 68 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 32 ஆண்களும், 36 பெண்களும் அடங்குகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!