முல்லைத்தீவில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
#Death
Prathees
3 years ago

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் இன்று (20) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவரும் பிரதீபன் புஸ்பராணி (32 வயது) எனும் இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.



