கண்டியில் கணவனைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த மனைவி
#kandy
#Murder
#Police
#Crime
Prathees
4 years ago
கண்டி மாவட்டம், பொல்காஹவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்டிகும்புர பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை மனைவி கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில், மெட்டிகும்புர, கெந்தேஹேன பிரதேச்தைச் சேர்ந்த 42 வயதுடை குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்த நபரின் மனைவியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொல்காஹவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.