அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Prabha Praneetha
4 years ago
18 வயதிற்கு உட்பட்ட 15.67 மில்லியன் மக்களுக்குத் தேவையான கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசி மருந்து இலங்கைக்கு தற்போது கிடைத்திருப்பதாக இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இதுவரையில் 32 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைத்திருப்பதாக கூறினார்.