நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்
Prasu
4 years ago
வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய சின்னையா ராஜா, ஹலாவத்தை பகுதித்தை சேர்ந்த 21 வயதுடைய சஜிந்த டில்சான் ஆகிய இரு இளைஞர்கள் இவ்வாறு நீரிழ் மூழ்கியுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டு ஒன்றில் இன்று (19) மாலை 05 மணியளவில் ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது சின்னையா ராஜா என்ற இளைஞன் நீரில் மூழ்கியபோது சஜிந்த டில்சான் என்பவர் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேலையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.