WhatsApp பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!
#Arrest
Prasu
4 years ago
இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும் அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்புச்செய்ய வேண்டுமெனவும் கோரி WhatsApp ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விசாரணைகளின் படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு போலி செய்திகளையும், தகவல்களையும் நம்பி ஏமாறவேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.