யானை தாக்கி வயோதிபப் பெண் பரிதாப மரணம்!
#Attack
Prasu
4 years ago
அம்பாறை மாவட்டம், பக்கிஎல்ல பொலிஸ் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 75 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார்.
வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்தார்.
சேனரத்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் பெண்ணின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.