தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 75 ஆயிரம் பேர் இதுவரை சிக்கினர்

#Arrest #Curfew
Prasu
3 years ago
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய  75 ஆயிரம் பேர் இதுவரை சிக்கினர்

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 551 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 37 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 58 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் - வெளியேறும் 13 பிரதேசங்களில் 117 பொலிஸார், 92 இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 164 வாகங்களில் நேற்று வந்த 292 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 295 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அனுமதிப்பத்திரமின்றி 895 வாகனங்களில் பயணித்த 1,388 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!