இலங்கையில் தீவிரமடையும் மற்றுமொரு ஆபத்து ! மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #people
Yuga
3 years ago
இலங்கையில் தீவிரமடையும் மற்றுமொரு ஆபத்து ! மக்களுக்கு எச்சரிக்கை!

கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் (covid associated pulmonary aspergillosis) என்ற பெயரில் இந்த நோய் அடையாளம் காணப்படுகின்றது.

இந்த நோய் கடந்த ஏப்ரல் முதல் நாட்டில் பரவி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பூஞ்சை தொற்று தொடர்பான விசேட வைத்தியர் ப்ரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 12 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

‘உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களையும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களையும் எளிதாக தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய், சில நேரங்களில் நல்ல உடல் நலம் உள்ளவர்களையும் தாக்கும்.

இப்பூஞ்சை சுவாசிக்கும் காற்றிலும், வீட்டில் உள்ள அழுகிய காய்கறிகள், பழவகைகள், செடிகள் மற்றும் நாள்பட்ட ரொட்டி ஆகியவற்றிலும் பரவலாக காணப்படும்.

மூக்கடைப்பு, மூக்கிலிருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணை சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் கண் பார்வை குறைபாடு, தலைவலி, பல் வலி மற்றும் பற்கள் ஆடுவது ஆகியவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாகும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கிருமி காற்றில் பரவி மூக்கின் வழியே உடலுக்குள் வருகிறது. வந்த பிறகு நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக இருந்தால் அது நம்மை ஒன்றும் செய்யாது. நோய் எதிர்ப்பு குறையும் பொழுது இந்தக் கிருமி மூக்கில் உள்ள சதைகளின் உள்சென்று வளரும். பிறகு ரத்த நாளங்களிலும் சென்று பரவும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!