கொழும்பில் மதுபானசாலை திறப்புக்கு எதிராக போராட்டம்
#SriLanka
#Police
Yuga
4 years ago
ஐக்கிய சுயத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஷால்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (19) எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ், குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபானக்கடைகளை மட்டுமே திறக்க அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது மற்ற சிறிய கடைகளை திறக்க அனுமதிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமையவே, சந்தேகநபர்கள் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.