இலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது ஜப்பான் !
#SriLanka
#Flight
Yuga
4 years ago
இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.
அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த தடை நீக்கப்பட்டுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.அதற்கமைய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் அதிகரிப்பினால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பானின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில நாடுகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.