போதைப்பொருளுடன் வந்த மற்றுமொரு மீன்பிடிக் கப்பல்: 9 வெளிநாட்டவர்கள் கைது
Prathees
4 years ago
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் பாரியளவான போதைப்பொருளுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே வெளிநாட்டு மீன்பிடி கப்பலுடன் ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மீன்பிடி கப்பல் மற்றும் 09 வெளிநாட்டு சந்தேக நபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு 155 கிலோ கிராம் போதைப்பொருளைக்கடத்திய பாகிஸ்தானியர் 7 பேர் உட்பட 9 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.