ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்கா பயணம்
#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 22 ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளதாகவும் அமர்வின் போது ஜனாதிபதி பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஓய்வு பெற்ற வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.