ஜனாதிபதி மக்ரோனை ‘ஹிட்லராக’ சித்தரித்தவருக்கு €10.000 யூரோக்கள் தண்டப்பணம்!
Keerthi
4 years ago
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை ‘அடோஃப் ஹிட்லராக’ சித்தரித்த ஒருவருக்கு €10.000 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில், Var மாவட்டத்தில் வசிக்கும் 62 வயதுடைய Michel Ange Flori என்பவரே மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். La Seyne-sur-Mer மற்றும் Toulon ஆகிய நகரங்களில், பொது இடங்களில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை சர்வதிகாரி என தெரிவித்து, அவரது உருவத்தையும் சித்தரித்திருந்தனர்.
அதை அடுத்து ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு, வழக்கு பதிவு செய்தார். பின்னர் Michel Ange Flori கைது செய்யப்பட்டார். இன்று வெள்ளிக்கிழமை செப்டம்பர் 17 ஆம் திகதி அவருக்கு Toulon நகர குற்றவியல் நீதிமன்றம் €10.000 யூரோக்கள் தண்டப்பணம் அறிவித்து தீர்ப்பு வழங்கியது.