ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகள் இலங்கைக்கு
Prabha Praneetha
4 years ago
இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக சீனா அரசாங்கம் இலங்கைக்கு 01 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது..
இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
சினோவெக் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும்.
ஆகஸ்ட் இறுதி வரை சுமார் 50 நாடுகளில் 1.8 பில்லியன் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1.4 பில்லியன் டோஸ்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.