மீண்டும் பணிக்குச் சென்ற ஓய்வுபெற்ற டொக்டர் கோவிட் தொற்றால் பலி
#Covid 19
#Corona Virus
#Death
Prathees
4 years ago
கட்டுகஸ்தோட்டை பிராந்திய மருத்துவமனையில் பணிபுரியும் டொக்டர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதான சயிட் ரபைதீன் என்ற டொக்டர்.
குறித்த டொக்டர் முன்பு ஓய்வு பெற்றிருந்தாலும்இ தற்போதைய தொற்றுநோய் காரணமாக அவர் தனது கடமைகளைத் தொடங்கியுள்ளார்.
பேராதனை போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் மூன்று வாரங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்ததாக தெரதிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கஹவத்த ஆதார வைத்தியசாலையில் தீவிர நிலை காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுமி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை பிசிஆர் பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.