சிறையில் மிரட்டப்பட்ட கைதி யார்? வெளியானது விபரம் !
#Anuradapura
#Prison
#Jaffna
Yuga
4 years ago
அனுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால், மிரட்டப்பட்ட தமிழ்க் கைதியின் விபரம் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற 33 வயது கைதியே, அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.