இலங்கையில் கொவிட் தடுப்பூசி அட்டை இன்றி பிரதான நகருக்குள் செல்ல தடை !
#SriLanka
#Covid 19
#Covid Vaccine
Yuga
4 years ago
ஒரு மருந்தளவு தடுப்பூசியேனும் செலுத்தாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பண்டாரவளை நகருக்குள் பிரவேசிக்க நேற்று (15) தடை விதிக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் சோதனை சாவடியில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்கும் நபர்களுக்கு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியிலும், அத்தியாவசிய கடமைகளை செய்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அட்டை இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
பண்டாரவளை நகரில் பெருமளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.