அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா வைரஸின் அதீத தாக்கம்!
#world_news
#Covid 19
Mugunthan Mugunthan
3 years ago

அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர். தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும். மக்கள் கவனக்குறைவாகவோ அலட்சியமாகவோ இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



