ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதியின் அதிரடி அறிவிப்பு !
#SriLanka
#Lockdown
Yuga
3 years ago

சில கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் வாரம் நாட்டை திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகள் குறித்து இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிந்துரைகளின் படி நாடு சில கட்டுப்பாடுகளுடன் திறக்க தீர்மானிக் கப்படும் என்றும், நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



