மஹிந்தவின் கோட்டைக்குள் தீவிரவாத தாக்குதல் முயற்சி - பரபரப்பில் தென்னிலங்கை
#Airport
#Police
#Attack
Yuga
4 years ago
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக கிடைத்த தகவலின் காரணமாக இன்று புதன்கிழமை பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தங்காலை காவல்நிலையத்தின் பல அதிகாரிகள் இன்று மத்தள விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனினும், இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.