எரிவாயுவின் விலையை உயர்த்துமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை!
Prabha Praneetha
4 years ago
உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் புதிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
உள்ளூர் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை இருப்பதை அமைச்சு ஏற்றுக்கொள்கிறது என்றும் ஆனால் அது முன்பு போல இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி தற்போது எரிவாயு உற்பத்தி நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் எரிவாயுவின் விலை குறித்து எரிவாயு நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.