12-15 வயது பிரித்தானிய பிள்ளைகளுக்கு தனி ஒரு டோஸ் போதுமானது. உயர் வைத்திய அதிகாரிகள்!
Mugunthan Mugunthan
4 years ago
ஆரோக்கியமான 12-15 வயது பிள்ளைகளுக்கு தனிப்பட்ட ஒரு டோஸ் கொவிட் தடுப்பூசி போதுமானது என பிரித்தானிய உயர் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறு வழங்குவது அவர்களுக்கு படிப்பில் இடையுறு ஏற்படாதிருக்க உதவும் என்றனர்.
குளிர்காலத்தில் வைரஸ் பரவிக்கொண்டே இருக்குமாகையால் இவ்வாறு இதனை முடிவுக்கு கொண்டுவரலாம் என மேலும் உயர் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். சமூகத்திற்கான முழு ஆதாயத்தையும் கருதாமால் பிள்ளைகளுக்கான நேரடி நன்மைகளை மட்டுமே மதிப்பாய்வில் கருதப்பட்டன.
உடல்நலக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுடன் வசிப்பவர்கள் தடுப்பூசி பெறலாம் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இவ்விடயம் இந்த வயதினரில் உள்ள 3 மிலியன் குழந்தைகளில் எட்டு பேரில் ஒருவருக்கு பொருந்தும்.