அவசரகால விதிமுறைகள் குறித்து மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தனது உரையில் இலங்கை தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அண்மைக் காலங்களில் இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் மிகவும் விரிவானவை மற்றும் சிவில் செயல்பாடுகளில் இராணுவப் பங்கை விரிவாக்கலாம் எனத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக சவால்கள், இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாதது அடிப்படை உரிமைகள், ஜனநாயக நிறுவனங்கள், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டார்.



