பிரித்தானியாவில் நெரிசலான நேரத்தில் காலநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். 78பேர் கைது.

நெரிசலான நேரங்களில் சாலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்ததால், வாகனதாரிகளை பாதையின் சில பகுதிகளைத் தவிர்க்குமாறு பொலிசார் எச்சரித்தனர்.
இதன் விளைவாக எஸ்செக்ஸ் பொலிஸார் 12 நபரையும், ஹெட்போர்ட்சியர் பொலிஸார் 18 நபரையும், சரேயில் 36 பேரும், கென்ட்டில் 12 பேருமாக மொத்தம் 78 பேரை பொதுத் தொந்தரவு மற்றும் வேண்டுமென்றே இடையுறு செய்த குற்றங்களுக்காக கைது செய்து தடுப்பில் வைத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பல எண்ணிக்கையான சந்திகளை காலை 8மணிக்கு சற்றுப்பின் தடைசெய்யலானார்கள். பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் இந்த பாதை காலை 10.20மட்டில் திறக்கப்பட்டுவிட்டது. வாகனதாரிகளின் பொறுமைக்கு நன்றி தெரிவித்த பொலிஸார் சில சாரதிகள் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இழுத்து வெளியேயும் விட்டுள்ளனர்
ஏஏ தலைவர் எட்மன்ட் கிங் இதனைப்பற்றி கருத்து கூறுகையில் இந்த நடவடிக்கை உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல், அதிக தாமதம் மற்றும் அதிக வாகன வாயுக்கள் மூலம் சுற்றுசூழல் மாசுபடுத்தலையும் ஏற்படுத்துகிறது. என்றார்.



