இங்கிலாந்தில் 29,173 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
#world_news
#Corona Virus
Mugunthan Mugunthan
4 years ago
இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு தளர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இதனால் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், தளர்வுகள் அமுல்படுத்தப்பட்டன.
இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,173 பேருக்கு (நேற்று 29,547) கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 72,26,276 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.