கனேடிய குப்பைக்குள் மனித உடல்பாகம் கண்டுபிடிப்பு!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடாவில் குப்பைகள் சேகரித்து மீள்சுழற்சி செய்யும் மையத்தில் மனித உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நேற்று மதியம், Ottawaவிலுள்ள Sheffield Road என்ற பகுதியில் அமைந்துள்ள மறுசுழற்சி மையம் ஒன்றில் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு நடுவே மனித கால் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு பொலிசார் சென்றுள்ளனர்.
இந்த வழக்கு பின்னர் கொலை வழக்குகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு எவ்வகையிலும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போதைக்கு விசாரணை குறித்த எந்த தகவலையும் வெளியிடப்போவதில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுள்ளனர்.