கனடா பெடரல் பொதுதேர்தலுக்கு முன்கூட்டியே வாக்குப்பதியும் மக்கள்!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனேடிய பொதுத்தேர்தல் 20ம்திகதி செப்டம்பர் நடக்கவிருக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பெடரல் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்ட இந்த சிறப்பு வசதியினூடாக முதல் நாளில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியானது திங்கட்கிழமை இரவு 9 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி அஞ்சல் மூலம் வாக்களிக்க பதிவு செய்வதற்கான காலக்கெடுவும் இதுவாகும். இதன் பின்னர், செப்டம்பர் 20ம் திகதி முன்னெடுக்கப்படும் வாக்குப்பதிவில் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.