கனடா - ஒன்டாரியோவில் செவிலிய பெண் சுட்டுக்கொலை!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடா ஒன்டாரியோவில் செவிலிய இளம் தாயார் ஒரு துப்பாக்கி வேட்டுக்கிலக்காகி வைத்தியசாலையில் மரணமடைந்து
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் வடமேற்கு லண்டனில் தமது வாகனத்தில் காத்திருந்துள்ளார் 30 வயதான Lynda Marques.
அப்போது அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கி வெடித்ததாகவும், அதில் Lynda Marques ரத்தவெள்ளத்தில் சரிந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி Lynda Marques மரணமடைந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் லண்டன் பொலிசார், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அடையாளப்படுத்தியுள்ளனர்.