நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் கப்ரால் !
#Parliament
#Ajith Nivat Cabral
Yuga
4 years ago
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று (திங்கட்கிழமை) காலை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கப்ரால் கையளித்தார்.
இந்நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.