பூண்டு விவகாரம்: மூன்று அதிகாரிகள் இடைநீக்கம்
#Bandula Gunawardana
Prathees
4 years ago
சதோச வெலிசர களஞ்சியசாலையிலிருந்து 70 மில்லியன் ருபாய் மதிப்புள்ள 56,000 கிலோகிராம் பூண்டு விற்பனை செய்த அதிகாரிகள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பூண்டு தனியார் வியாபாரிகளுக்கு 74 லட்சம் ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா சதொசவின் பொது முகாமையாளர் (நிதி) மற்றும் இரண்டு முகாமையாளர் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில்ஈ சதோசவிலிருந்து பெறப்பட்ட இரண்டு கொள்கலன் வெள்ளைப்பூடு மூன்றாம் தரப்பினருக்கு உயர் நிர்வாகத்திற்கு தெரியாமல் விற்கப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன,
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.