சுவிற்சலாந்து லுசேனில் கொவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம்!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கடந்த சனிக்கிழமை கொவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று லுசேர்னில் நிகழ்ந்துள்ளது
மத்திய சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் தெருக்களில் சுமார் 1,500 ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் சுமார் 1,000 பேர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொவிட் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இரவு விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற உட்புற இடங்களுக்கான அணுகலை அனுமதிக்கும் அரசாங்க முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்திய போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
லூசெர்னில் நடந்த பேரணி உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் அது குழப்பங்கள் இன்றி நடந்து முடிந்துள்ளது.