அமெரிக்காவில் 400 ஏக்கரில் காட்டுத் ‛தீ'

#America
Prasu
3 years ago
அமெரிக்காவில் 400 ஏக்கரில் காட்டுத் ‛தீ'

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள காடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்குப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் 5 ஏக்கர் அளவிலான காட்டுப் பகுதியில் பற்றி எரிந்த தீயானது, சில மணி நேரத்தில் சுமார் 400 ஏக்கர் அளவிற்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீ பற்றி எரியும் பகுதியை ஒட்டியுள்ள சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. எப்படி தீ பற்றியது என்பது தெரியாத நிலையில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி மேலும் தீவிரமடைந்துள்ளது.

சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!