சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்த நபர் சிஐடியினரால் கைது
#Arrest
Prathees
4 years ago
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை தம்பானை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உவைஸ் சைபூல் ரகுமான் என்பவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்துள்ளார் என தெரிய வந்தததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை 8 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த நபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.