தென் ஆப்பிரிக்கா அணிக்கு 104 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த இலங்கை அணி
Prasu
3 years ago

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் டைப்ரைஸ் ஷம்சி மற்றும் ஐடென் மார்க்ரம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.
பிஜுரன் போர்டுன் இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.
இதற்கமைய, தென்னாபிரிக்கா அணிக்கு 104 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



