திருமணத்திற்கு வருபவர்கள் கொடுக்கும் அன்பளிப்பிற்கு ஏற்ப உணவை தர திட்டமிட்ட ஜோடி

#wedding
Prasu
3 years ago
திருமணத்திற்கு வருபவர்கள் கொடுக்கும் அன்பளிப்பிற்கு ஏற்ப உணவை தர திட்டமிட்ட ஜோடி

பொதுவாக இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் திருமணங்கள் என்றால் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் இருக்கும். இந்தக் கொண்டாட்டத்திற்கு பல லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை செலவு செய்யப்படுவது வழக்கம். திருமணத்திற்கான ஏற்பாடு தொடங்கி, உணவு, உடை, கலை நிகழ்ச்சிகள் எனப் பல ஏற்பாடுகள் ஒரு திருமணத்தில் நடைபெறும். இந்த ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு தான். அந்த உணவிற்கு தான் பெரும்பாலானோர் அதிகமாக செலவு செய்வார்கள். அந்தவகையில் தற்போது ஒரு தம்பதி தங்களுடைய திருமணத்திற்கு வருபவர்கள் கொடுக்கும் அன்பளிப்பிற்கு ஏற்ப உணவை தர திட்டமிட்டுள்ளது.

அதன்படி வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள உள்ள தம்பதி ஒன்று தங்களுடைய திருமணத்திற்கு வருபவர்களிடம் அவர்களுடைய அன்பளிப்பு மதிப்பை நிரப்ப கூறியுள்ளது. அந்த அன்பளிப்பின் மதிப்பிற்கு ஏற்ப விருந்தினர்களுக்கு உணவு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அன்பளிப்பை மதிப்பு 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் 250 டாலர் மதிப்பு வரை உள்ள பரிசு பொருட்களை தரும் நபர்கள் அன்பு கிஃப்ட் பட்டியலில் இடம்பெறுவார்கள். அவர்களுக்கு வருத்த சிக்கன் பரிமாறப்படும்.

அதன்பின்னர் 251 டாலர் முதல் 500 டாலர் மதிப்பு வரை பரிசு கொடுக்கும் நபர்கள் வெள்ளி கிஃப்ட் பட்டியலில் இடம்பெறுவார்கள். அவர்களுக்கு விருந்தாக சிக்கன் மற்றும் ஸ்டீக், மீன் ஆகியவை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக 501 டாலர் முதல் 1000 டாலர் வரையிலான பரிசு பொருட்கள் தருபவர்கள் தங்க கிஃப்ட் பட்டியலில் இடம்பெறுவார்கள். அவர்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள உணவுகளுடன் சேர்ந்த்து லாப்ஸ்டர் உள்ளிட்ட மேலும் சில உணவுகள் தரப்படும்.

கடைசியாக 1000 டாலருக்கு மேல் மதிப்பு உள்ள பரிசை கொடுக்கும் நபர்கள் 'பிளாட்டினம் கிஃப்ட்' பிரிவில் இடம்பெறுவார்கள். அவர்களுக்கு அதிகபட்சமாக திருமண உணவில் தயாரிக்கப்படும் அனைத்து வகை அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாப்பாடு உடன் மதுவும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி பரிசின் மதிப்பிற்கு ஏற்ப விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறும் தம்பதியின் செயலை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!