ஐந்து வயது சிறுவன் கோவிட் தொற்றினால் மரணம்
#Death
#Covid 19
Prathees
4 years ago
இரத்தினபுரி மல்வல பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனினின் இறுதிச்சடங்குநேற்று (11) இரவு இரத்தினபுரி சுடுகாட்டில் நடைபெற்றது.
இதற்கிடையில்இ நாவலப்பிட்டி மருத்துவமனையில் கோவிட் நோய்த்தொற்றால் உயிரிழந்ந்த ஒருவரின் மத சடங்குகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நாவலப்பிட்டி மருத்துவமனையில் இறந்த கிதுல்கல பிரதேசத்தில் வசிக்கும் 86 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையின் மத வழிபாடுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.