ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கையா?
#Earthquake
Yuga
4 years ago
ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இதை அறிவித்துள்ளது.4.1 மெக்னிடியூட்டில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.