ஐக்கிய அரபு இராஜ்ஜியம் செல்ல காத்திருப்போருக்கு நற்செய்தி!
#SriLanka
#India
#Tourist
#Covid Vaccine
Yuga
4 years ago
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதித்திருந்த சுற்றுலா தடையை நாளை முதல் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற கொரோனா தடுப்பூசிகளை இரண்டு தடவையும் பெற்றிருத்தல் வேண்டும்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை பெங்கொக்கிற்குள் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்-19 பரவலை அடுத்து அந்த நாட்டு சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெங்கொக் அறிவித்துள்ளது.