மட்டக்களப்பில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
#Batticaloa
#children
#Death
Yuga
4 years ago
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச்சென்ற 15வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த – ரமீஸ் சஜாத் என்பவரே தனது ஐந்து நண்பர்களுடன் கடலில் குளித்த போது இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.