கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விற்கு மிரட்டல்!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடாவில் எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் அவர்கள் காரசாரமான விவாதமொன்றை தொலைக்காட்சியில் நிகழ்த்தியிருந்தனர். இதை லங்கா 4 நேர்கள் அறிந்த
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி கேம்பிரிட்ஜில் ட்ரூடோ தேர்தல் பரப்புரையின் போது அவருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், கேம்பிரிட்ஜில் ட்ரூடோவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான Kitchener குடியிருப்பாளர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கனடாவில் ட்ரூடோ பரப்புரையில் நடந்த சம்பவத்திற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை