இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் பிரான்ஸ்
Prabha Praneetha
4 years ago
இலங்கைக்கான நேரடி விமான சேவையைத் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஏர் பிரான்ஸ் ஆரம்பிக்கவுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கைலிமிடெட் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விமான நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏர் பிரான்ஸ் செயற்பாடுகள் நாட்டில் சுற்றுலாத் துறையில் ஒரு ஏற்றத்தை உருவாக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளன.