மட்டக்களப்பில் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது
#Arrest
#Batticaloa
#Police
Prathees
4 years ago
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸார், நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது 36 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிக்கிராம், 38 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிக்கிராம், 39 வயதுடைய ஒருவரிடம் 110 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்நில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.